ஸ்ரீமான் தூசி ராஜகோபால பூபதியவர்களால் இயற்றியதும், சென்னை, பெரம்பூர் பாரக்ஸ், செல்வபதி செட்டி கம்பெனியரால் அச்சிடப்பட்டடப்பட்டதுமான “மதிமோச விளக்கம்” என்னும் புத்தகம் நமது பார்வைக்கு வந்தது. அப்புத்தகத்தில் பொது ஜனங்களை ஏமாற்றி பிழைக்கக்கூடிய வேஷக்காரர்களும், தந்திரக்காரர்களும், பொய்யர்களும், பித்தலாட்டக்கார்
களும் எப்படி தங்களுடைய தந்திரம், புரட்டு, பொய், பித்தலாட்டம் முதலியவைகளை எப்படி ஜனங்களிடம் உபயோகப்படுத்தி வஞ்சிக்கிறார்கள்தைப் பாமர ஜனங்களும் சுலபத்தில் அறியும்படியாக சுமார் 130 அத்தியாயங்களாகப் பிரித்து, அவற்றில் 130 விதத் தந்திரங்களை உதாரணமாக எடுத்துக்காட்டி பெரிய ஸைசில் 225 பக்கங்களாகவும், ஷை புரட்டுகளுக்கேற்ற
பல சித்திரங்களையும் கொண்டு எளிய நடையில் தெளிவாய்ப் பிரசுரித்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதை வாங்கிப் படித்தால், ஒவ்வொருவரும் உலகத்திலுள்ள சகல ஏமாற்றங்களையும் சுலபமாய் அறியலாம். இப்புத்தகத்தின் விலை புத்தகத்தின் அளவுக்கும் விஷயத்திற்கும் மிகக் குறைந்ததென்று
சொல்லத்தகுந்த ஒரு ரூபாய்தான். ஆகையால், ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை வாங்கி வாசித்து புத்திசாலிகளாக வேண்டுமாய் விரும்புகிறோம்.