உத்தம தேசபக்தரும், முஸ்லீம்களுள் சிறந்த ஞானவான் எனக் கொண்டாடத்தக்கவருமாகிய மௌலானா அப்துல்பாரி அவர்கள்‌ சமீபத்தில் மரணமடைந்தாரெனக் கேள்விப்பட மிகவும் வருந்துகிறோம். இவருடைய பெருத்த ஆதரவைக் கொண்டே கிலாபத் இயக்கமாகிய மத விஷயத்தில் மகாத்மா காந்தி தலையிட்டுழைக்கும்படியாயிற்று. காலஞ் சென்ற மௌலானா அவர்கள் முஸ்லிம்களின் மத கல்வி விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தை கொஞ்சமல்லல. இத்தகைய பெரியார் காலஞ்சென்றது மகமதிய சமூகத்துக்கே பெருத்த நஷ்டமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை.

(ப-ர்)