வன்மை; கோபம்; ஆளுந்திறம்; ஆண்களுக்குச் சொந்த மென்றும், சாந்தம்; அமைதி; பேணுந்திறம் பெண்ணுக்குச் சொந்த மென்றும் சொல்வதானது வீரம்; வன்மை; கோபம்; ஆளுந்திறம் புலிக்குச் சொந்தமென்றும், சாந்தம்; அமைதி; பேணுந்திறம் ஆட்டுக்குச் சொந்தமென்றும் சொல்வது போன்றதே ஒழிய

உண்மையான காதலுக்கு மதிப்புக் கொடுப்போமானால் உண்மையான காதல் இருக்குமேயானால் பிள்ளையைச் சுமந்து பெறும் வேலை ஒன்று தவிர மற்ற காரியங்கள் இரு பாலருக்கும் ஒன்று போலவே இருக்கும் என்பது உறுதி.